குரு தத்வம்.

குரு தத்வம்.

” குருப்பிரம்மா குருவிஷ்ணு குருதேவோ மஹேஸ்வர:

குருசாக்ஷாத் பரஹ்பிரம்மம் தஸ்மை ஸ்ரீ குரவே நம:”

குரு என்ற பதத்திற்கு ஆத்ம ஜ்ஞாநம் அருள்பவர் என்று பொருள். ஸரீரத்தைக் குறிப்பதல்ல. ஆத்மாவிற்கு நீளம் அகலம் உயரம் என்ற பரிமாணங்கள் கிடையாது.

குருவை நாம் பிரார்த்திக்கும் போது முதலில் நிர்குணமாய் இருந்தவர், பின்னர் நம்பால் கருணை கூர்ந்து ஸகுண ஸ்வரூபம்  எடுத்து நம்மை  உய்விக்க வந்துள்ளார் எனறு மிக அன்புடன் தியானிக்கவேண்டும்.

குருநாதர் தான் பரப்பிரம்மம். அவருடைய முதல் லக்ஷணம் கருணை.  மற்றவர்கள் செய்ய லஜ்ஜை படும் செயலைக்கூட  சிஷ்யனுக்காகச் செய்பவர் தான் குரு.  தன்  சிஷ்யனுக்காக தன் நிலையிலிருந்து  கீழ் இறங்கி  அவனை  எப்படியாவது  கை தூக்கிவிடுவார்.    பரப்பிரம்மத்திற்கு  ” ஜீவர்கள்  எப்படி யாவது முக்தி பெற வேண்டும் என்ற நினைப்பே எப்போதும் மேலோங்கி நிற்கும்.

தேவர்களை நாம் யக்ஞங்கள் மூலம் ஆராதிக்க வேண்டும்.   யக்ஜங்களுள் ஜப  யக்ஜமே சிறந்தது.    ஜபத்தின்   பிரதான அங்கம் மந்திரம். மந்திரத்தை நமக்கு உபதேசித்து  அதனை ஜபிக்கவேடிய முறைகளை  அவரே கடைப்பிடித்து நமக்கு வழி முறைகளை வகுத்துக்கொடுத்து உதவுபவர்.

குருவின் பாதங்களில் பூரண சரணாகதி அடைந்து அவருக்கு பூரண திருப்தி வருமாறு உதவிகள் செய்துக்கொடுத்து அவர் ஓய்வாக   இருக்குக்போது   விநயமாக   கேள்விகள்   கேட்டு சாஸ்திர விஷயங்களை அவருடைய உபதேச அனுக்ரஹம் மூலமாக கிடைக்கப்பெட்று தெளிந்து உய்ய வேண்டும்.

” எவனொருவனுக்கு   பகவானிடத்தில் மேலானபக்தி  இருக்கிறதோ,  பகவானிடத்தில்   இருப்பதே    போல்    குருவிநிடத்திலும் பரம  பக்தி   இருக்கிறதோ அந்த  மஹாத்மாவிற்கு எல்லா பரம    ரஹஸ்யமான    உண்மைகளும் முழுமையாக தாமாகவே ஸ்புரிக்கும்”

மஹாவாக்கியம்

வாக்கில் அடங்காத மிகப் பெரிய விஷயத்தை வாக்கில் வரும் படியாக வரவழைத்து  சிஷ்யனுக்கு உபதேசித்து விளக்குபவர் குரு.

தத்த்வமஸி  என்ற வாக்கியம் ஸாமவேதத்தின் சாரம்ஜீவாத்மாவாகிய  நீயேதான்   அதுவாகிய     பரமாத்மா ஆகிறாய் என்ற கருத்தே இந்த வாக்யத்தின் ஸாராம்சம்.

அஹம் ப்ரஹ்மாஸ்மி   இது யஜுர்வேதத்தின்  ஸாரம்.  மேற் குறித்த  தத்துவத்தை  கேட்டு  தெளிந்த  சிஷ்யன் அதனை இன்னும் தெளிவாக உணர்கிறான்.

அயமாத்மா ப்ரஹ்ம   இது அதர்வண வேதத்தின் ஸாரம்; மேலும் மேற்குறிப்பிட்டபடி   தெளிந்த சிஷ்யனுக்கு குரு விளக்குகிறார்  ” இந்த ஜீவாத்மா  பரப்பிரம்ம   ஸ்வரூபம் ஆகிய  பரமாத்மாவேதான் இது திண்ணம் என்று உறுதிப் படுத்துகிறார்.

ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம       இது    ருக்வேதத்தின் ஸாரம்.  மேற்சொன்ன    மூன்று    வாக்கியங்களின்       திரண்ட பொருளே இந்த வாக்கியத்தின் ஸாராம்சம்.

மேற்கண்ட நான்கு வாக்கியங்களின் திரண்ட பொருளான ” ஜீவ- ப்ரஹ்ம  அபேதம்” என்ற  உண்மையை   தெளிவாக உணர்தலே   ஒரு   ஜீவன்   தன்னைப்  பரப்ரஹ்மமாகவே அறிந்து தெளியக் காரணமாகிறது.

ஸ்ரீ குருவே நம:

சுபம்

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s