ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (24)

494.   கபிலாராத்யஹ்ருதையா
கபில முநிவராக அவதரித்து மகாவிஷ்ணு முதலான எல்லா தேவர்களாலும் விதிமுறைப்படி ஆராதிக்கப்படுபவள்.
495.   கபிலாப்ரியவாதினீ
குமாரியாக ஆவிர்பவித்த அவஸரத்தில் இளம் பெண்களுடன் இன்பக் கேளிக்கையாக  உரையாடி மகிழ்பவள்..
496.   கஹசக்ரமந்த்ரவர்ணா
சஹஸ்ரார சக்கரத்தின் மத்தியில் திரிகோணாகாரமாக பிரதிஷ்டியாகி உள்ள மாத்ருகா மணிபீடத்தில் விந்யாஸமாகியுள்ள அ காராதி ஷ காராந்தமான ஐம்பத்தொரு மாத்ருகைகலான ஸகல மந்திரங்களின் அக்ஷ்ரங்களிலும் உறைந்து கொண்டு அவற்றை உபாஸிக்கும் ஸாதகர்களை  ஆட்கொண்டு அருள்பவள்.
497.   கஹசக்ரப்ரஸூனகா
ஸஹஸ்ரார  சக்ரத்தில் அமர்ந்துள்ள அகாராதி ஷகாராந்தமான ஐம்பத்தோரு மத்ருகைகளின் ஒலிகளே தன் வடிவமாகக் கொண்டு, உபாஸகனின் சைதன்யத்திலேயே தன் வித்யுத் சக்தியை  ப்ரசரிக்கச் செய்து அவனது புக்தி வீறுடன் இயங்கச் செய்து அவன் சீக்கிரமே மந்திர ஸித்தி பெற அநுக்ரஹிக்கும் ஆதி பராசக்தி மூர்த்தி.
498.   கஏஈலஹ்ரீம் ஸ்வரூபா
தச மஹாவித்தைகளில் மூன்றாவது வித்தையாகிய ஷோடசியில் அடங்கிய பஞ்சதசியில் முதல் தளமானது “வாக்பவகூடம்” என்ற சங்கேத பரிபாஷை சொல்லால் குறிக்கப்படுவதும் ஆன  க ஏ ஈ ல ஹ்ரீம்  என்ற ஐந்து பீஜக்கூட்டின் வடிவில் ஆவிர்பவித்து அந்த வித்யையில் சக்தி ப்ரணாலியைஆற்றுவித்து அருளிய ஆதி பராசக்தி.  
499.   கஏஈலஹ்ரீம் வரப்ப்ரதா
ஷோடசியில் அடங்கின பஞ்சதசியின் முதல் தளமான வாக்பவ கூடத்தின் முதல் பீஜத்துடன் தொடங்கி அநுஸந்திக்கப்படுவதும் “காதி வித்யை” என்ற சங்கேத பரிபாஷை சொல்லால் குறிக்கப் படுவதும் க ஏ ஈ  ல ஹ்ரீம்  என்ற ஐந்து பீஜக்கூட்டுடன் தொடங்கிய கோவையினால் உருவாகும் வித்யையின் வடிவில் ஆவிர்பவித்து, அந்த வித்தையில் தன் வித்யுத் சக்தியின் ஸ்போடத்தை ப்ரசரிக்கச் செய்து , அங்ஙனம் அந்த வித்யையை உபாசிக்கும் தன் பக்தனை ஆட்கொண்டு அவன் கோரிய வரங்களை வரையராது வழங்கி அருள்பவள்.
500.   கஏஈலஹ்ஹ்ரீம் ஸித்திதாத்ரீ
காதி வித்யையைத் தீவிரமாக உபாஸித்த மனு, மன்மதன், லோபாமுத்திரை, துர்வாஸர், முதலான உத்தம யோகிகளுக்கு வெகு சீக்கிரமே மந்திர ஸித்தி வழங்கி அருளிய அநுக்ரஹமூர்த்தி.
501.   கஏஈலஹ்ரீம் ஸ்வரூபிணீ
வித்யாராஜ்ஞீயில் அடங்கிய ரஸகோடி, க்ரியாகோடி, ஜ்ஞானக்கோடி, ஆனந்தகோடி ஆகிய நான்கு தளங்களில் பரிணாமமாக  ஷோடச பீஜங்களின் கூட்டாக, ஸ்ரீ ஷோடசியாக ஆவிர்பவித்து அந்த வித்யையின் கூடங்களின் ஸ்வரூபங்களைத் தன் வ்யக்திகளாகவே கொண்டு அந்த வித்யையை உபாசிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு அருள்பவள்.

502.   கஏஈலஹ்ரீம் மந்த்ரவர்ணா

ஷோடசி வித்யையின் எல்லா தளங்களிலும் மந்திர பீஜாக்ஷரங்களிலும் மாத்ருகை களிலும் அந்த மந்த்ரத்த்தின் எல்லா துணுக்கமான அங்கங்களிலும் தானே தன் பூர்ண வ்யக்தியின் ஸாந்நித்தியம்  கொண்டு உறைந்து அதனை உபாசிக்கும் ஸாதகர்களின் எல்லா முயற்சிகளிலும் தானே ஊடுருவி சிறப்பித்து அவர்களை ஆட்கொண்டு முக்தி அருளும் பெருவள்ளல்.
503.   கஏஈலஹ்ரீம் ப்ரஸூ
ஸாதகலோகம் உய்ய வித்யராஜ்ஞி, தாரா, ஷோடஸி, புவனேஸ்வரி, ஸாவித்திரி, காயத்ரி, பஞ்சாக்ஷரம், குமார ஷடக்ஷரம், நாராயண அஷ்டாக்ஷரம், சௌராஷ்டாரணம், உச்சிஷ்ட கணபதி முதலான எல்லா வித்யைகளையும் ஸங்கலனம் செய்து உலகுக்கு வழங்கிய ஜகன்மாதா.
504.   கலா
வித்யாராஜ்ஞி மஹாவித்யையின் மூல மந்திரத்தில் அடங்கிய இருபத்திஇரண்டு பீஜங்களில் அமர்ந்துள்ள ஷோடச மாத்ருகைகளின் சமஷ்டியே தன் வித்யுத் சக்தியின் பூரண வ்யக்தியாகக் கொண்டு அதன் ஆற்றலை தன் பக்தனின் புத்தியில் ப்ரஸரிக்கச்செய்து, அங்கனமாக அவன் அந்த  வித்யையை வீர்யவத்தாக ஸாதித்து மோக்ஷம் அடைய அருளும் அநுக்ரஹமூர்த்தி.
505.   கவர்க்கா
தன் வ்யக்தியை “க” காரமாகிய ஆத்யாக்ஷரமாக ப்ரதீஷ்டையாகியுள்ள வித்யாராஜ்ஞியின் பூரண  ஸாந்நித்தியம் கொண்டு அந்த விதியையை உபாஸிக்கும் தன் பக்தனை ஆட்கொண்டு மோக்ஷம் அருள்பவள்.
506.   கபாடாஸ்தா
ஜீவர்கள் முக்தி பெறுவதற்காக எடுக்கும் ப்ரயத்தனங்களைப் போஷித்து அவர்களுடைய மோக்ஷ த்வாரத்தைப் பரிபாலித்துக் கொடுக்கும் அன்புத்தாய்.
507.   கபாடோத் காடனக்ஷமா
ஜீவர்கள் மோக்ஷம் அடைய வொட்டாமல் பெரும் இடையூறாக ஜன்ம ஜன்மமாகத் தொடர்ந்து தடுத்துக்கொண்டே வரும் மீள முடியாத ஸம்ஸார ஸாகர தளைகளை ஒரு கணத்தில் தகர்த்தெரியவல்ல பராசக்தி மூர்த்தி.
508.   கங்காலீ
பிராணிகளின் சரீரத்திநின்று தோல், மாமிசம், ரத்தம், முதலியவை நீங்கப்பெட்ற எலும்புக்கூடு “கங்காலம்”  எனப்படும்.   அத்தகைய நிலையை, அதாவது ராஜஸ, தாமஸங்கள் வர்ஜமாகி எஞ்சியுள்ள சுத்த ஸாத்வீக குணத்தின் நிலையை எய்தியுள்ள ஜீவன், ஆத்ம ஜ்யோதிஸ்ஸின் ஸ்பூரணத்தை உணரத்  தகுதி அடைகிறான்.  அந்நிலையை தன் பக்தனுக்கு அவ்யாஜமாக அதாவது  பத்ரா பாத்ரம் பாராமல் உடனே வழங்கி அருளும் பரம கருணாமூர்த்தி.
509.   கபாலீ
ஆஜ்ஞா சக்ரத்திலிருந்து ஸஹஸ்ராரத்த்தின் அக்ரம் அடையுமுன் லலாட ப்ரதேசத்தின் இடயிலுள்ள ஒன்பது உபாதி ஸ்தானங்களினூடே, யோகாப்பியாஸ ப்ரயத்தனத்தின் வேகத்தில், தன் தீவிர முயற்சியில் உத்தமமான வழி காட்டியும் ஸமய ஸஞ்ஜீவினியும் தனது ஆப்த ஸகியுமான குண்டலினியின் இன்றியமையாத ஸஹாயத்தால் மேலும் மேலும் முன்னேறி ப்ரஹ்மரந்த்ர ஸ்தானத்தில் ஸிம்ஹாஸனத்தில் வீற்றிருக்கும் குரு ஸ்வரூபிணியாக ஆவிர்பவித்து, உபாஸக – உபாஸதாதாதம்ய ஸோsஹம் பாவத்தில் லயித்திருக்கும் தன் பக்தனை, கராவலம்பனோத் தாரணம் செய்து மோக்ஷம் அருளும் க்ருபாநிதி.
510.   கங்காலப்ரியபாஷிணீ
கருணா ஜ்ஞானாதி குணபூர்ணமான ஸகுணப்ரஹ்ம வ்யக்தியாகிய ஹம்ஸகுரு ஸ்வரூபம் தாங்கி ஸாதகனுக்கு  அத்யாத்ம வித்யையை உபதேசித்து இனிய எளிய வாசகங்கள் மூலம் ப்ரம்மஸ்வரூப லக்ஷணங்களை நிஸ்ஸம்ஸயமாக விளக்கி அவனுக்கு சீக்கிரமே ஆத்மஞானமும், மோக்ஷமும் ஸித்திக்க அருளும் குருமூர்த்தி.
511.   கங்காலபைரவாராத்யா
ப்ரஹ்மதேவருடைய ராஜஸத்தைக் களையும் வாயிலாக அவருடைய ஊர்த்வ முகத்தைக் கொய்துஎரியும் பொருட்டு, பரமஸிவனின் கோபத்தின் ஆவிர்பாவமாகத் தோன்றியருளிய ஸ்ரீகாலபைரவரே ஸ்ரீ காளிவித்யாக்ரமத்தின் மூல மந்த்ரமாகிய வித்யாராஜ்ஞியின் ருஷி ஆனதால் அவ்வகையில் அவரே  ஸ்ரீ தக்ஷினகாளிகையின்  வரிவஸ்யா, ஸபர்யா, ஸரணியை க்ரமப்படுத்திக் கொடுத்திருப்பதால், ஸ்ரீ காளி வித்யா யோகினிகள் யாவருக்கும் வித்யாக்ரம மூல குருநாதரான அவரால் இங்கனம் சீர் படுத்தப்பட்ட க்ரமத்தில் முதன் முதல் ஆராதிக்கப்பட்டு அன்று முதல் இன்று வரை அதேக்ரமத்தில் சக்ரத்திலும், மேருவிலும், மூலமந்திர புரஸ்ஸரமாகப் பூஜிக்கப்பட்டு வரும் பர தேவதை.
512.   கங்காலமானஸஸ்திதா
ப்ரஹ்மவித்யையையும் ஸாக்த தத்துவத்தையும் உலகுக்கு ஈர்ந்து அருளியுள்ள மஹோபதேஸகரான ஸ்ரீ மஹாகாலரால் ஸதா ஸர்வகாலமும் தன் ஹ்ருதயத்தில் அந்தர்யாக விதிப்படி ஆராதிக்கப்படும் ப்ராசக்திமூர்த்தி.
(அடுத்த பதிவில் தொடரும்)
Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s