ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (27)

554.   கல்பலதா
ஸிவ  தத்துவ  ப்ரதிபாதமாகிய  வ்ருக்ஷத்தின்  மீது  ஆரோஹணிக்கும்  ஸக்தி  தத்துவ ப்ரதிபாதமாகிய “லதா ” எனப்படும் சக்தி  சிவ தத்துவ  ஸ்வரூபிணியாகத்  தன் பக்தனின் புத்தியில் ஆவிர்பவித்து,  அங்கு தானாகவே ப்ரஹ்மஞான  ஜ்யோதிஷ்மதியாகவும் மனோல்லாஸ லாஸ்ய லோலினியாகவும் அமர்ந்து  அவனுடைய ஸாதனா க்ரமங்களில் தன் வித்யுத்  ஸக்தியை ப்ரசரிக்கச் செய்து அவனை ஒரு ஆதர்ச  உபாஸக தல்லஜனாக பிரகாஸிக்கச் செய்து மகிழும் பரமாநுக்ரஹமூர்த்தி.
555.   கல்பமாதா
இந்தப் பரந்த  ப்ரபஞ்சத்தில் அடங்கியுள்ள சேதனா சேதனமாக உள்ள எல்லாப்  பொருள்களின் பஞ்சக்ருத்ய விதானத்தின் பொறுப்பை தானே ஏற்று நிர்வஹித்துக் கொடுக்கும் அருள் வடிவான ஜகன்மாதா.
556.   கல்பகாரீ
நித்யம் நைமித்திகம் காம்யம் ஆகிய அவசியம் கர்தவ்யமான எல்லா வித கர்மாக்களின் அனுஷ்டானமும் வைதீகபரமாக நிகழ்த்தவேண்டும் என்ற விதியின் கீழ் கர்மனுஷ்டமான பத்ததிகளை நிர்ணயித்து உலகுக்கு உதவும் லோகமாதா.
557.   கல்பபூ:
தானே க்ரியா சக்தி ஸ்வரூபிணீ மற்றும் கால  சக்தி ஸ்வரூபிணீ  ஆதலால் சக்ரத்தின் பரிதி நேமியின் ஆவர்த்தம் போல் சுழன்று சுழன்று மாறி மாறி உருண்டு வந்துகொண்டே இருக்கும் கல்பம் ப்ரளயம் என்ற செயல்பாட்டு நிகழ்சிகளின் மாற்றுச் சுழற்சி க்ரமத்தைத் தானே தோற்றுவித்து  நிர்வஹித்து மகிழும் ஆதி பராசக்திமூர்த்தி.
558.   கர்பூராமோதருசிரா
த்யானயோக முறையில் ப்ரேம  பாவத்துடன் தன்னை ஏகாக்ர சித்தத்துடன் அனன்யமாக ஆழ்ந்து சிந்தனை செய்து மகிழும் தன் பக்தனுக்கு நிரதிசய ஆனந்தமும் ஜீவான் முக்தியும் அளித்தருளும் ஆனந்த மூர்த்தி.
559.   கர்பூராமோததாரிணீ
தான் நிர்குண ப்ரஹ்மமாக இருந்த போதிலும் தன் பக்தன் தீவிர ஆர்வத்துடன் பொங்கும் ஊக்கத்துடனும் ப்ரேம த்யானத்துடனும் தன் மூல மந்த்ரத்தை ஜபித்துக் கொண்டே ஆழ்ந்த  தன்மய பாவ ஸ்திதியில்  இருக்குங்கால் எந்த விதமான இடையூட்றாலும்  அவனுடைய தாரணைக்கு ஸ்காலித்யம் ஏற்படாவண்ணம்அவனுடைய ஜப் த்யானங்களைக் காப்பாற்றி அவனுக்குத் துரீய நிலை ஏற்பட்டு  ஆனந்த  அனுபவம் நிலைத்துத் தொடர அருளும் அநுக்ரஹமூர்த்தி.
560.   கர்பூரமாலாபரணா
ப்ரேம த்யானத்தை அடிப்படையாகக் கொண்ட ஜப யஜ்ஞத்தில்  மந்த்ர ஜப ஆவர்த்த ஸங்க்யையைக் காப்பாற்றிக்  கொடுக்கும்  உபகரணமாகிய  அக்ஷமாலை தாங்கும் ஸாதனமானது வலது  கையில் தானே அமர்ந்து, மந்திர ஜப ஸ்ரேணியின் வரிசைக் க்ரமமான சுழர்ச்சி  முறைப்படி சரிவர கொண்டு செலுத்தி அருளும் பரம கருணாமூர்த்தி.
561.   கர்பூரவாஸ பூர்த்திதா
ஜன்ம ஜன்மாந்தரங்களாக  பூர்வ கர்மாகளின் விளைவான ஸத்வாசனைகள்  தொன்று தொட்டு வாழை  அடி வாழையாகத் தொடர்ந்து வந்து ஸாதகனின் த்யான முயற்சிகளுக்குப்   பெரிதும் உபகரிப்பதால் அவற்றின் உதவி கொண்டு அவனது சிந்தனா பிரயாசைகள் வீறு பெறச் செய்து அவனுடைய வித்யோபாசன க்ரமம் செவ்வனே பூர்த்தி அடைந்து அதன் பூரண பலமாகிய  ஆனந்தமும் முக்தியும் தடையற அவனுக்கு எளிதில் சித்திக்க அருளும் க்ருப்பைக்கடல்.
562.   கர்பூரமாலாஜயதா
தன் பக்தன் தன் ஸ்வரூப த்யானைத்திலேயே ஆழ்ந்து தன் மூலமந்த்ரத்தையே ஸதா ஜபித்துக்கொண்டே இருக்கையில், ஜபயஞ்ஞத்தில் பேருபகரணமாக அவன் கையாளும் அக்ஷ மாலையில் தானே விரைந்தமர்ந்து அதனில் தன் பூரண ஸாநித்யம் கொண்டு உறைந்து அவனுடைய உத்தேஸங்களுக்கும் முயற்சிகளுக்கும் பூரணவெற்றி உண்டாக அருளும் ஜயஸாலினி.
563.   கர்பூரார்ணவ மத்யகா
தன் பக்தன் ப்ரேம த்யானத்தில் மூழ்கி செயலற்றுக் கிடக்கையில் அவனது மனமே பரிவார ஸக்திகள் புடைசூழ்ந்த சக்ரமாக இயங்க, அவனது புத்தியே பிந்து ஸ்தானமாக இயங்க அதன் மத்தியில் தானும், பத்ராத்மஜனும், மஹாகாலரும் ஆகிய த்ரிமூர்த்திகளும் ஒரே ஜ்யோதிஸ் புஞ்ஜமூர்த்தியாக  ஜ்வலித்துக் கொண்டே  அவனையும் ப்ரஹ்ம ஜ்ஞான  ஜ்யோதிர்மயகோள ஸ்வரூபனாக்கி, அவனுக்கு ஆனந்தமும் முக்தியும் அருளி மகிழும் தேஜோமூர்த்தி.
564.   கர்பூரதர்பணரதா
தன் பக்தன் தன் வித்யோபாஸன க்ரமத்தினூடே அணுமாத்ர விஸ்வவிலய ப்ரணாலியாகிய பிந்து தர்பண க்ரமத்தை நிகழத்துங்கால், அந்தக்ரமத்தில் தானாகவே சென்றமர்ந்து அதன் மூலம் அவன் விஸ்வரூபனாகவும்  பரம குருவாகிய விஸ்வநாதனாகவும் பரிமணித்து பூர்ணாநந்த  மூர்த்தியாகி  ஜீவன் முக்தனாகுமாரு அருளி மகிழும் ஆனந்தமூர்த்தி.
565.   கடகாம்பரதாரிணீ
தானே நிர்குண ப்ரஹ்மம் ஆனதால் தன பக்தன் நிகழ்த்தும் ஆராதனா க்ரமங்களில் தன்னை ஆவாஹனம் செய்து பூஜிக்கும் சக்ரத்தின் மத்தியில் உள்ள மஹாகாச ப்ரதிபாதகமானபிந்துவே தனக்கு அவன் அற்பணிக்கும் வஸ்த்ர பூஷணாதி உபஸாரங்களாகக் கொண்டு  கடாகாசமாகிய அவனது தஹராகாஸத்திலேயே தான் வெகு விரைவில் சென்றடைந்து அவனுடைய புத்தியில் தனது வித்யுத்ஸக்தியை ப்ரஸரிக்கச் செய்து தானே அங்கு பரஞ்ஜ்யோதிஸ் வடிவில் ஜ்வலிக்கத் தொடங்கி அவனையும் ப்ரஹ்மஜ்ஞான ஜ்யோதிர் மயனாக ஆக்கிஅருளும் ரூபாரூபமகிஷி.
566.   கபடேஸ்வரஸம்பூஜ்யா
ஆறறிவு படைத்த மனித  சரீரம் எடுத்துள்ள  தன் பக்தனால்  ” என் அன்பான தாய் என்னை நிச்சயமாக ரக்ஷிப்பாள் ” என்ற  திடகாத்திறமானமான  நம்பிக்கையுடனும், சுயேச்சையாகவும் பெருமகிழ்ச்சியுடனும் ஆராதிக்கப்படும் அவ்யாஜ கருணாமூர்த்தி.
567.   கபடேஸ்வரரூபிணீ
தான் நிர்குண ப்ர்ஹ்மமே ஆனபோதிலும், ஜீவன் கர்மாநுஷ்டானம் மூலமே முக்தி ஸாதனத்துக்கு அடிப்படை தேவையான ஆத்ம ஜ்ஞானம் அடைய ஸாத்யமாவதால் ஒவ்வொரு ஜீவனிலும் அந்தர்யாமியா  இருக்கும் ஆத்மாவின் ரூபத்திலே இயங்கி அவனுடைய ஆத்மாவையும் மனஸ்ஸையும் சரீரத்தையும் ஸத்கர்மங்களில் ஊக்குவித்து ஈடுபடுத்தி அங்ஙனமாக அவனை ஸம்ஸ்கரித்து அவனுக்கு எளிதில் ப்ரஹ்ம ஞானமும் முக்தியும் ஸித்திக்க அருளும் பரம காருணிக ஜகதம்பா.
568.   கடு
பரஹிம்ஸை செய்யும் துஷ் கர்மிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுப்பவளாகவும் பரோபகாரம் செய்யும் ஸாதுக்களுக்கு மிக இன்பம் பயப்பவளுமான ஜகதீஸ்வரி.
569.   கபித்வராஜாத்யா
பூர்வத்தில் இந்த்ராதி முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூஷ மஹா காலரால் பூஜிக்கப்பட்ட ப்ரகாரம் அருகம்புல், அலரிப்புஷ்பம் எருக்கம்பூ முதலிய புனித த்ரவியங்களைக் கொண்டு அர்ச்சனை ஹோமம் தர்ப்பணம் முதலிய க்ரமங்களில் தன்னை வித்முரைப்படி ஆராதிக்கும் தன் பக்தனை ஆட்கொண்டு அருள்பவள்.
570.   கலாபபுஷ்பதாரிணீ
கலாவதி தீக்ஷை க்ரமத்தில் குருவினால் சிஷ்யனின் சரீரத்தில் பாதாதி கேசாந்தமாக, கேசாதி  பாதாந்தமாக ந்யாஸிக்கப்பட்டுள்ள சகல மாத்ருகைகளையும் தன்னுடைய  வ்யகத்திகளாகவே கொண்டு அவற்றின் ஒலி ஓட்டத்திலேயே தானாகவே சென்றடைந்து அதனில் பூரண ஸாந்நித்யத்துடன் உறைந்தருளி பக்தனுடைய மூச்சுக் காற்றிலும், கண்டத்திலும், நாக்கிலும் பற்களிலும்  உதடுகளிலும் அண்ணத்திலும் இவற்றின் கூட்டமைப்புக்கு அடங்கிய முக குஹரத்திலும் தன் வித்யுத் ஸக்தியை ப்ரஸரிக்கச்செய்து அனைத்து மாத்ருகா புஷ்பங்களுக்கு மலர்ச்சி கொடுத்து, இங்கனமாக அவனுடைய மந்திர தீக்ஷையின் உபக்ரமண, ஸம்ஸ் காரத்தையும், ப்ரயோகத்தையும் அநுஷ்டானத்தையும் பரிபாலித்துக்கொடுத்து அவனை உய்வித்தருளும் கருணாமூர்த்தி.  
571.   கலாப புஷ்ப ருசிரா
மாத்ருகைகளின் ஒலிஓட்டத்திலேயே பெரிதும் விருப்பம் கொண்டு அவற்றாலான மந்த்ரங்களையும் ப்ரேம த்யானத்துடன் உபாஸிக்கும் தன் பக்தனை ஆட்கொண்டு அருள்பவள்.
 572.   கலாபபுஷ்ப பூஜிதா
சக்ரமேருவில்  ஷட்கோணம் – நவகோணம் – நவகோணபாஹ்யம் – அஷ்டதலம் – கோபுராந்த ராலம் – பூபூரம் – பிந்துஸ்தானம் – கூர்மபீடம் ஆகிய ஸ்தலங்களில் முறையே பிரதிஷ்டை ஆகியுள்ள கால்யாதி – உக்ராதி – ப்ரேமஸாராதி – ப்ராம்ஹ்யாதி – இந்த்ராதி – காலபைரவ்யாதி – தக்ஷினகாலிகாதி – ஜயாதி – தேவதைகளின் வ்யக்திகளிலும் அவர்கள் எழுந்தருளியிருக்கும் ஸ்தலங்களிலும் ரேகைகளிலும் கோணங்களிலும் அந்தர ப்ரதேசங்களிலும் ஆங்காங்கு ப்திஷ்டைஆகியுள்ள மாத்ருகைகளே  தன்   வ்யஷ்டி வ்யக்திகளாக ஆவாஹனம் செய்தும் அதே முறைப்படி, ஒரு யோகினியின் ஸரீரத்தில் அதே க்ர்மத்தில்  ஆவாஹனம் செய்தும் தன்னை விதிமுறைப்படி ஆராதித்துச் சரணமடையும் தன் பக்தனை ஆட்கொண்டு அவனுக்கு ப்ரஹ்மஞானமும், ஜீவன் முக்தியும், வழங்கி அருளும் அபார கருணா ஸிந்து.

(அடுத்த பதிவில் தொடரும்)    

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s